என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ரசிகர் ஒருவரைக் கடத்தி வந்து கொலை செய்த குற்றத்திற்காக கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவலுக்குப் பிறகு பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். இதுவரையில் அவரை சந்திக்காமல் இருந்த குடும்பத்தினர் நேற்று சிறைக்குச் சென்று தர்ஷனை சந்தித்துள்ளனர்.
தர்ஷன் அம்மா மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் நேற்று காலையில் சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி என்ற தர்ஷனின் ரசிகர், தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதனால், வந்த ஆத்திரத்தில்தான் தர்ஷன் ஆட்களை வைத்து அவரைக் கொன்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகா சுவாமியின் மனைவி அவரது முதல் குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.
ஜூலை 4 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தர்ஷன். இந்த கொலை விவகாரம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.