
சூர்யா, ரவிக்குமார் படம் எப்போது துவங்கும்?
ஏற்கனவே ‛இன்று நேற்று நாளை" பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதனை டிரீம் வாரியர், அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூர்யா, ரவிக்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!