கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை என்றாலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதினை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் “டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது 'கொட்டுக்காளிக் திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெவித்துள்ளார்.