நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வருகிற 23ம் தேதி திரைக்கு வரும் படம் கொட்டுக்காளி. வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போலவும், அதற்கு சிகிச்சை கொடுப்பதற்காக வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிரைலரின் முதல் காட்சியில் ஒரு சேவலை கயிற்றால் கல்லில் கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள். அதை சோகத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் படத்தின் நாயகி அன்னா பென். இந்த சேவலுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாயகனாக நடித்த இரண்டு படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.