பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் ‛கொட்டுக்காளி'. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக., 23ல் படம் ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது : இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என கேட்டேன். அவன் யாருமே கிடையாது என்றான். என்ன இவன் பெரிய ஆள் போல பேசுகிறான் என தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின் வினோத் என்னை செருப்பை கழற்றி அடித்திருக்கிறான் என தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று வாழை. அதை பார்த்த பின் ஒருவாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று கொட்டுக்காளி. இந்த படத்தை பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. இதை மக்கள் வந்து பார்க்க நான் நிர்வாணமாக கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். காரணம் சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்க்கத்தானே. இன்றைக்கு 16 வயதினிலே மாதிரியான படங்கள் எடுத்தால் பார்ப்பார்களா என தெரியவில்லை. இந்த படம் என் தாயின் கருவறை, என் மகளின் யோனி. வினோத்தின் காலை நான் தொட்டு முத்தமிடும் அளவுக்கு இந்த படத்தை அவன் எடுத்திருக்கிறான். இளையராஜாவிற்கு பின் வினோத் காலை நான் முத்தமிடுவேன்'' என்றார்.