தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

தமிழில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும், வெற்றியும் பெற்றுள்ள நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் ஹெலன் ஆகிய படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது கொட்டுக்காளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, பஹத் பாசில் நடித்து தயாரித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமாகி நடித்தது மிகப்பெரிய அனுபவம். அந்த படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருந்த பஹத் பாசில் என்னையும் மற்றும் அந்த படத்தில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோரையும் அழைத்து, “முதல் படம் உங்களை தானாகவே தேடி வந்து அழைத்துக் கொள்ளும். ஆனால் உங்களது அடுத்தடுத்த படங்களை நீங்கள் தான் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்” என கூறினார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் எனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.