மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, மலையாளத்தில் தியான் மற்றும் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் ஆகிய படங்களை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தின் மூலம் அழகிய லைலாவாக கவனம் ஈர்த்த நிகிலா விமல் முதன்முறையாக ஆர்யாவுடன் இந்த படத்திற்காக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.