அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் 2, லியோ ஆகிய படங்களில் மாஸ் காட்டிய சஞ்சய் தத் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது தெலுங்கில் அவருக்கு முதல் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்க, கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி கவுர் தயாரித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15ல் இந்த படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி கவுர் பேசும்போது, “நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை நான். சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். அதனால் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் அடுத்தடுத்த வித்தியாசமான ஏழு படங்களில் நடிக்க முன்கூட்டியே சஞ்சய் தத்தை நாங்கள் ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.