இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பலாத்காரம் பிரச்னைகளால் பெரும் சிரமத்திற்குள்ளதானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். புகார்கள் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த கேரளாவில் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் சர்மிளா என்ற நடிகை பழைய சம்பவத்தை புது குண்டாக தூக்கி போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 1997ல் ‛அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும்' என்ற திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்கென அமைத்திருந்த ஒரு செட்டில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது இப்பட தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன்.
ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ' நோ ' என்று கதறியபடி வெளியே ஓடினேன். ஒரு ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டிற்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன் ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை.
அந்த ' அட்ஜஸ்மென்ட் '
இது போல் மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது ‛பரினயம்' என்ற திரைப்பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் ஹரிஹரன், நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் சர்மிளா அந்த 'அட்ஜஸ்மென்ட் ' பண்ணுவாரான்னு கேட்டார். நான் ‛நோ' சொன்னேன். உடனே படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள திரையுலகில் உள்ளது. இது போல் 28 பேர் வரை ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நடிகை சர்மிளா கூறியுள்ளார்.