தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' | பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ் |
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது வரை இதன் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சுமாராக 6 சண்டை காட்சிகள் இடம் பெறுகிறது. சிவகார்த்திகேயனை முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக காட்ட ஏ.ஆர். முருகதாஸ் நிறைய மெனக்கெட்டு வருகின்றார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.