பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த சில கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மனிதர்கள் மண்ணில் புதைந்தும் இடிபாடுகளில் சிக்கியும் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டம் ஆகிவிட்டன.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவு உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்த வயநாடு நிலச்சரிவு பாதிப்பு நிதியாக தானும் தனது மகன் ராம்சரணும் இணைந்து ஒரு கோடி ரூபாய் முதல் கட்ட தொகையாக வழங்குவதாக இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சிரஞ்சீவி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனி விமான மூலம் நேரடியாகவே திருவனந்தபுரம் வந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்காக இப்படி ஆந்திராவில் இருந்து சிரஞ்சீவி நேரில் வந்து உதவித்தொகை வழங்கியுள்ளது கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.