தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். அவருடைய சினிமா தயாரிப்பில் நடிகை சார்மியும் ஒரு பங்குதாரராக இருக்கிறார். அவர்கள் கடைசியாகத் தயாரித்த 'லைகர், டபுள் ஐஸ்மார்ட்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மி இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
தொடர் தோல்விகளால் தவித்த பூரி, தெலுங்கில் சில நடிகர்களை சந்தித்து தனது அடுத்த படத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக் கூடாது என அவர்கள் சொன்னதாகத் தகவல் வெளியானது.
அதன்பின் தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையைக் கூறியிருக்கிறார் பூரி. கதை பிடித்துப் போன விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. ஜுன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இப்படத்திற்கான பத்திரிகை செய்தியை நேற்று வெளியிட்டார்கள். அதில் இணை தயாரிப்பாளராக சார்மி இருப்பதும், புகைப்படத்தில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி இருப்பதும் பூரி மற்றும் சார்மி தங்களது தயாரிப்பு நட்பை இன்னமும் தொடர்கிறார்கள் என்பதை தெரிய வைத்துள்ளது.