சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலு உடன் இணைந்து 30 படங்களில் காமெடியில் அசத்தி உள்ளார். அதிலும் இவர்களது கூட்டணியில் வந்த தலைநகரம், எலி போன்ற படங்களின் காமெடி ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதிலும் வெங்கல் ராவ்வின் தலையில் கை வைத்து மாட்டிக் கொண்டு வடிவேலு படும் அவஸ்ததை காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
கடந்த 2022ல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார் வெங்கல் ராவ். சினிமாவிலும் வாய்ப்பு இன்றி போக இப்போது அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். உடல்நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதில் அவருக்கு கை, கால்கள் வரவில்லை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
‛‛அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கல் ராவ் பேசுறேன். எனக்கு கை, கால்கள் விழுந்திடுச்சு. என்னால் நடக்கவும் முடியல, சரியாக பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை. மருந்து வாங்க கூட காசு இல்லை. நடிகர்கள், சினிமா சங்கங்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்க. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை'' என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.