‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
அர்ஜூன் நடித்து, இயக்கிய 'மதராஸி' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வேதிகா. அதன்பிறகு தமிழில் சக்கரகட்டி, காளை, முனி, மலை மலை, பரதேசி, உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான 'காஞ்சனா 3' படத்தில் நடித்தார். தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள 'பேட்ட ராப்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணி நடைபெற்று வருகிறது. இசை, நடனம், ஆக்ஷன் கலந்த படமாக தயாராகி வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.