டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்துடன், அவரது படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படம் மூலம் நாயகனாக மாறி, இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்ற நிலை மாறி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என உருவெடுத்துள்ளார். அடுத்து தமிழக அரசியலிலும் களம் காண உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருப்பவர், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார்.
நடிகர் விஜய் இன்று(ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலை முதலே அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக.,வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
கமல்
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.




