அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சமீபத்தில் வெளியான தனது ஐம்பதாவது படமான மகாராஜாவின் மிகப்பெரிய வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. வெவ்வேறு மொழிகளில் வில்லனாக அல்லது குணச்சித்திர நடிகராக நடிப்பதால், தமிழில் இவர் கதாநாயகனாக நடித்து வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தான் ராம் சரண் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 16வது படத்தின் தகவல்கள் பற்றி விஜய்சேதுபதி சில அப்டேட் தகவல்களை தெரிவித்துள்ளார். ராம்சரண் படத்தின் விவரங்களை இவர் சொல்வதற்கு காரணமும் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா ஏற்கனவே தெலுங்கில் உப்பென்னா என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். அந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி என்கிற கதாநாயகியை அறிமுகப்படுத்தியதுடன் விஜய் சேதுபதிக்கும் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கொடுத்து தெலுங்கு ரசிகர்களிடமும் அவரை பற்றி பேச வைத்தார்.
சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த விஜய்சேதுபதி, இயக்குனர் புஜ்ஜி பாபு சனாவை நேரில் சந்தித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார். கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவாகிறது என்றும் இதன் கதையை வலுவாக அவர் உருவாக்கி இருக்கிறார் என்றும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமையும் என்றும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.