நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இளம் நடிகைகள் தந்தை வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் கவுரி கிஷன் தன்னை விட 4 வயது குறைவான புதுமுகம் ஆதித்யா மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த உண்மை வெளியானது.
முரளி மற்றும் ஜி.கார்த்திக் தயாரிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள படம் 'அதர்ஸ்' . இந்த விழாவில் பேசிய ஆதித்யா மாதவன் "இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள், அவர்கள் தங்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இருவருமே எனக்கு அக்கா மாதிரி" என்றார்.
இதுகுறித்து கவுரி கிஷன் பேசும்போது ''ஆதித்யா மாதவனுக்கு 22 வயது தான் ஆகிறது. பார்த்தால் அப்படி தெரியாது. ஆனால் நான் தம்பி என்றோ, அவர் என்னை அக்கா என்றெல்லாம் பார்க்கவில்லை. தொழில் ரீதியாக அவருக்கு ஜோடியாக நடித்தேன். 'கிசுகிசு'வில் இருந்து தப்பிக்க இப்படி சொல்லி 'எஸ்கேப்' ஆகியிருக்கிறார்'' என்றார்.