டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
மலையாள திரையுலகில் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பத்தோடு பதினொன்றாக துணை நடிகராக கவனிக்கப்பட்ட இவர், கடந்த சில வருடங்களாக கதையின் நாயகனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக என தனது நடிப்புத் தலைமையை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகிறார். அதனாலேயே இவரை மலையாளத் திரையுலகின் விஜய்சேதுபதி என்று கூட இவரை அங்குள்ளவர்கள் சொல்வது உண்டு. தமிழில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது ஆதர்ச நடிகரான விஜய்சேதுபதியை கேரளாவில் சந்தித்த ஜோஜூ ஜார்ஜ் அந்த சந்திப்பில் விஜய்சேதுபதி தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “என்னுடைய பேவரைட் நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தது அளவிட முடியாத மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அதன் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்றபோது தான் அவரை சந்தித்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.