விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
முன்னணி தயாரிப்பாளரான சிபு தமீன்ஸின் மகன் விருது ஹிர்து ஹாரூன். 'தக்ஸ்' படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு 'மும்பை கார்' என்ற படத்தில் நடித்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்திலும் நடித்த தற்போது ‛டெக்ஸாஸ் டைகர்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த “பேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.
படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.