ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக இயக்குனர் அவதாரமும் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கமல்ஹாசனின் பயோபிக்கை இயக்குவீர்களா என ஸ்ருதி ஹாசனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது: வாய்ப்பே இல்லை. அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்க நான் சரியான ஆள் இல்லை. நல்ல நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அப்பாவின் வாழ்க்கையை நல்லபடியாக படமாக எடுப்பார்கள். என் அப்பா அல்டிமேட் என எப்பொழுதும் நினைப்பது உண்டு. அப்பா ரொம்ப கூல். ஒரு நாள் நான் செட்டுக்கு சென்றபோது அவர் இயக்குனர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். என் அப்பா வகுப்பறையில் இருப்பது போன்று கேட்டுக்கொண்டிருந்தார். அதை பார்த்ததும் இயக்குனராக இருப்பது ரொம்ப கூலான வேலை என நினைத்தேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.