சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ஹிந்தியிலும் நடிக்கிறார். தசை அழற்சி நோய் பாதிப்பிற்கு பின்னர் குறிபிட்ட சில படங்களைக் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் சமந்தா. மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதை மம்முட்டியே தயாரிக்கவும் உள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வந்தது. இப்போது கதாநாயகியாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 15ம் தேதி அன்று சென்னையில் தொடங்குகிறது.