மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் | சினிமாவில் பட்ட அவமானம் : மனம் திறக்கும் மூசா அபிலாஷ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நிமிடம் இடம் பெறுகின்றன என்கிற தகவலை அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் கதைக்கு திருப்பமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டியில் அவருடன் இணைந்து நடித்த விஜயகாந்த், தற்போது விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான இதில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்.