டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
நடிகர் அதர்வாவை தான் இயக்கிய பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். நடிகை சமந்தாவையும் அந்த படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து செம போத ஆகாத மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வீட்டிற்கு வருகை தந்து தனது பெற்றோரை சந்தித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறித்து ஒரு தகவலை தெரியப்படுத்தி, ஸ்ருதிஹாசனுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் பத்ரி வெங்கடேஷ். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“என் பெற்றோர் ஒரு முறை கூட சினிமா பிரபலங்களை அழைத்து வரும்படி சொன்னதில்லை. ஆனால் என் அம்மா மட்டும் ஸ்ருதியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார். அதை நிறைவேற்றிய ஸ்ருதிக்கு நன்றி” என்று கூறியுள்ளார் பத்ரி.
கடந்த 2018ல் ஸ்ருதிஹாசன், ஹலோ சகோ என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அதை இயக்கியவர் இந்த பத்ரி வெங்கடேஷ் தான். அது மட்டுமல்ல கமல் நடித்த அவள் அப்படித்தான் திரைப்படத்தையும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்வதற்காக சில முயற்சிகள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.