பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தந்தையைப் போலவே நடிப்பில் ஆர்வம் கொண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்கிற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் பின்னர் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய சினிமா அளவில் தனக்கென ஒரு பெயரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வரலட்சுமிக்கும் அவரது நீண்டநாள் நண்பரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் ஜூலை இரண்டாம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் திரையுலக பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் விநியோகம் செய்யும் பணியில் சரத்குமார், வரலட்சுமி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். முன்னணி நட்சத்திரங்களுக்கு தன் கையாலேயே திருமண அழைப்பிதழ் கொடுக்க விரும்பிய வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் சில புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.