ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஒருவழியாக பேச்சிலர் லைப்பிற்கு ‛பை' சொல்லிவிட்டு திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன். இந்து என்ற பெண்ணை வரும் 9ம் தேதி அவர் திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் எளிய முறையில் திருத்திணி முருகன் கோயிலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான திருமண பத்திரிக்கை ஏற்கனவே வெளியானது. தற்போது இந்த திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரேம்ஜியின் அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. ‛பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்... சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சுருக்கா...' இவை எல்லாவற்றையும் விட ‛பிரேம்ஜிக்கு எப்போ திருமணம்' என்ற கேள்விக்கு வரும் ஜூன் 9ல் தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார் பிரேம்ஜி.
சிறிய அளவில் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணத்தை எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். திருமண பத்திரிக்கை எப்படி வைரல் ஆனதோ அதேப்போன்று மணகள் மீடியாவை சேர்ந்தவர் என்று சில புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் போட்டோக்களை பகிர்கிறேன். எங்களின் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உறுதியாக அனைவரையும் திருமண வரவேற்பில் சந்திப்போம்.
இதன் உடன் விரைவில் ‛தி கோட்' அப்டேட்!''
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.