தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

'அரண்மனை 4' படம் மூலம் 100 கோடி வசூலைப் பெற்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அடுத்தும் தமன்னா, சுந்தர் சி கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் தமன்னாவிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் நடிக்க தமன்னாவும் சம்மதம் சொல்லியிருந்தாராம். அப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்போது அவரிடமிருந்து கதையை மட்டும் நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.
அந்தக் கதை சுந்தர் சிக்கும் பிடித்துப் போகவே அவரும் அதே கதையை இயக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.




