மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' |
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டூடே' படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு தற்போது எல்.ஐ.சி, டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இதனைத் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி அன்று ஐதராபாத்தில் துவங்குகிறது என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.