ஆகஸ்டில் திரைக்கு வரும் பிரசாந்தின் 'அந்தகன்' | 37 வயதில் நடிகர் சித்திக்கின் மகன் மரணம் | வேட்டையனை சந்தித்த சேனாபதி ; வைரலாகும் புகைப்படம் | முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்த அய்யப்பனும் கோஷியும் இசையமைப்பாளர் | இளநீர் கரகம் டான்ஸ் ஆடிய ராஷ்மிகா | வெளியான ஒரே வாரத்தில் 2-ம் பாகம் அறிவிப்பு ; முக்கிய வேடத்தில் இணைந்த சுரேஷ்கோபி | ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்' தனித்து வருமா? | சத்யபாமா - சத்தமில்லாமல் ஓடிடியில் வந்த காஜல் அகர்வால் படம் | 'அறம் செய்' ஒரு அரசியல் படம்: இயக்குனர் சொல்கிறார் | சோலோ நாயகி ஆனார் ரக்ஷிதா மஹாலட்சுமி |
தமிழில் விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' படத்தில் அறிமுகமானவர் நவ்நீத் ராணா. அதன்பின் கருணாஸ் ஜோடியாக 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்திலும் நடித்தார். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு அதே அமராவதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தால், பாகிஸ்தானுக்கு ஓட்டளித்தது போல,” என்று பேசினார். அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த முறை சுயேச்சையாக வெற்றி பெற்ற தொகுதியில் இந்த முறை அவர் தோற்றுப் போனார். காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார்19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.