இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று 81வது பிறந்தநாள். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோ முன்னால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்களும் திரையுலகினரும் திரண்டனர். அவர்களை இளையராஜா சந்தித்தார். பலருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இளையராஜா மகளும், பின்னணி பாடகியுமான பவதாரினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் இளையராஜா இந்த பிறந்தநாளில் உற்சாகமாக காணப்படவில்லை. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ''எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள். ஆனால் எனது மகளை நான் பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை'' என்றார்.
இதனிடையே சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஒலெக் அவ்டீவ், இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்தேன். அவர் ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர். மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஷ்ய இசை கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துவார். இந்த நிகழ்ச்சியை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.