எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், 'காந்தாரி'. ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதன் போஸ்டர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது:
கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து கண்ணனுடன் 15 வருடங்களாக நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதையை தொல்காப்பியன் என்னிடம் கொடுத்தார். நானும் எனது குழுவினரும் இந்த கதையை படித்தபோது இது சினிமாவிற்கு ஒன்றும் செட் ஆகிற மாதிரி இல்லையே, இதை எப்படி பண்ணுவது என யோசித்தேன். மூன்று மாதம் கழித்து தொல்காப்பியனை அழைத்து இது எனக்கு செட் ஆகாது என்று கூறினேன். மீண்டும் ஒருமுறை என்னை பார்க்க வந்த தொல்காப்பியன் எனக்கு 50 வயது ஆகிவிட்டது. என் பெயர் சினிமாவில் வரவேண்டும். இந்த கதையில் ஏதோ ஒரு அழுத்தமான எமோஷன் இருக்கிறது. இதை நீங்கள் உங்கள் பாணியில் எப்படியாவது டெவலப் செய்து சினிமாவாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள் எனக் கூறினார்.
அவரது சினிமா குறித்த ஆர்வம் கண்டு வியந்து போய் அந்த கதையை மீண்டும் அலசினோம். அந்த மொத்த கதையில் நரிக்குறவர் வாழ்க்கை முறை பற்றி சொல்லப்பட்டிருந்த விஷயம் என்னை கவர்ந்தது. அவர்கள் வாழ்க்கையை ஏன் படமாக எடுக்க கூடாது என்கிற எண்ணம் முதலில் ஏற்பட்டது. அடுத்ததாக இந்த கதாபாத்திரத்தையே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தால் என்ன என்கிற எண்ணமும் தோன்றியது. அதன் பிறகு நானும் எனது குழுவில் உள்ள சீனி செல்வராஜும் சேர்ந்து இந்த படத்திற்கு புதிய திரைக்கதையை உருவாக்கினோம். இந்த படத்தின் வசனங்களை சீனி செல்வராஜும் நானும் எழுதினோம். இதற்காக நரிக்குறவர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் பேசும் வசனங்களை ஒலிப்பதிவு செய்து, எங்களது படத்தில் நாங்கள் எழுதிய வசனங்களுக்கு அவர்கள் பேசியது எது பொருத்தமாக இருக்கும் என்பது வரை அவர்களிடம் கேட்டு ஆய்வு செய்து வசனங்களை எழுதினோம்.
ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தது இயக்குநர் கண்ணனுக்காக அல்ல. இதை எழுதி முடித்ததும் ஒரு பெரிய நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என நயன்தாரா அல்லது திரிஷா இவர்களை நடிக்க வைக்கலாமா என்கிற பேச்சு எழுந்தது. அதற்கான முயற்சியை ஆரம்பிக்கும் போதுதான் எதிர்பாராத விதமாக இயக்குநர் கண்ணன் எங்களை தொடர்பு கொண்டு ஹன்சிகாவின் தேதி எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் என்னிடம் இருக்கும் கதை அவருக்கு செட் ஆகவில்லை.. அவருக்கு ஒரு கதை தேவைப்படுகிறது. உங்களிடம் கதை ஏதாவது தயாராக இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் இருக்கும் கதையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தபோது 15 வது நிமிடத்திலேயே கதை சூப்பராக இருக்கிறது.என்னிடம் நீங்கள் இனி சொல்ல வேண்டாம். வாருங்கள் நேரடியாக ஹன்சிகாவிடமே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். உடனடியாக மும்பை சென்று ஹன்சிகாவை சந்தித்தோம்.
நான்தான் கதாசிரியர் என்றதும் அவர் ஆச்சரியப்பட்டு போனார். அவரிடம் 2மணி நேரம் கதை சொன்னோம். ஆனாலும் மிகப் பிரமாண்டமான கதை, மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுமே இதை இயக்குனர் கண்ணனால் கையாள முடியுமா என்கிற கேள்வியையும் எழுப்பினார் ஹன்ஷிகா. ஆனால் கண்ணனோ எந்த தயக்கமும் இன்றி இந்த படத்தை நான் பிரமாண்டமாக எடுத்து விடுவேன் என கூறினார்.
பின்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. அந்த சமயத்தில் அவர் திருமணம் செய்துகொள்ள இருந்ததால் சில காட்சிகளில் அவர் நடிக்க முடியாது என்று சொல்ல, அதை மனதில் கொண்டு கிட்டத்தட்ட 18 காட்சிகளில் மாற்றங்கள் செய்தோம். அதன் பிறகு மொத்த படக்குழுவினரையும் அமர வைத்து முழு கதையையும் வசனங்களுடன் அவர்களுக்கு படித்துக் காட்டினேன். படபிடிப்பின் போது இயக்குநர் கண்ணன், தனக்கு தோன்றிய சில மாற்றங்களை செய்து படத்தை இயக்கினார். அது அவரது சுதந்திரம்.
அதேசமயம் இந்த படத்தில் டைட்டிலை மாற்றலாம் என அவர் கூறியபோது நாங்கள் காந்தாரியே இருக்கட்டும் என காரணங்களுடன் கூறியதும் உடனே ஒப்புக்கொண்டார். அந்த வகையில் ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு படத்தை கண்ணன் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு காந்தாரி இரண்டாம் பாகமும் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.