உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'இளையராஜா' என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டது . இதில் ஹார்மோனியப் பெட்டியுடன் மக்கள் மத்தியில் இளைஞரான இளையராஜா இசை கச்சேரி நடத்துவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நேற்று வைரலாக பரவியது.