''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சூரி நடித்துள்ள 'கருடன்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சென்னையின் பல தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருடனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன்.
என் படங்களில் இனி கதை தான் ஹீரோவாக இருக்கும். நான் கதையின் நாயகனாக நடிப்பேன். இப்போதைக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காமெடி கதைகளும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
காமெடியனுக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் என்றார்.