'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாகவும் நடிக்கத் தயங்காதவர் விஜய் சேதுபதி. ஹிந்தியில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடித்த 'ஜவான்' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலாகி விஜய் சேதுபதி அங்கும் பிரபலமாகிவிட்டார்.
தமிழில் அவர் நடிப்பில் “மகாராஜா, ஏஸ்” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒரு படத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஆனால், விஜய் சேதுபதி இருபது கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டிருக்கிறார்.
அவரது சம்பளத்தைக் கேட்ட படத்தின் தயாரிப்பாளர் அவ்வளவு தொகை தர முடியாது, பத்து கோடி வேண்டுமானால் தருகிறேன் என சொல்லியிருக்கிறார். அதற்கு சம்மதிக்காத விஜய்சேதுபதி நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். அந்தக் கதையைத்தான் தற்போது ஜெயம் ரவியிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளாராம் பாண்டிராஜ்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து தமிழில் கடைசியாக வெளிவந்து ஓடிய படம் என்றால் '96' படம் மட்டுமே. அதன் பிறகு அவர் நடித்து தியேட்டர்களில் வெளியான “சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சங்கத்தமிழன், லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளிர், மெர்ரி கிறிஸ்துமஸ்” ஆகிய படங்கள் எதுவும் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அப்படியிருக்க இவ்வளவு சம்பளத்தைக் கேட்பது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.