கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படமாக 'கூலி' என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் உள்ளார் ரஜினி. அதனை முடித்த பின் கூலி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி அன்று தொடங்குகிறது என ரஜினி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப் பயணத்தில் உள்ள ரஜினி அங்குள்ள ஆன்மிக குருவை சந்தித்தபோது அவரிடம் தனது அடுத்தப்படமான கூலி பற்றிய தகவலை தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார் ரஜினி.