ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'கருடன்'.
'விடுதலை' படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்த படம் இது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியான போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படமும் இருந்ததால் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.
படத்தைத் தியேட்டர்களுக்கு வந்த பார்த்து ரசிகர்களும் நிறைவாகச் சொன்னதால் படம் வெளியான தினத்தில் மாலைக் காட்சியிலிருந்தே படத்திற்கு கூட்டம் அதிகமாகியது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் சுமார் 17 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதையின் நாயகனாக இரண்டாவது படத்திலும் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார் சூரி.