சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

தெலுங்கில் ‛உப்பென்னா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. இதை தொடர்ந்து வாரியர், கஸ்டடி என தமிழ் இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்தாலும் அடுத்து ஒரு பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்த வருடம் தமிழிலேயே கார்த்தி, ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்திலும் டொவினோ தாமஸ் ஜோடியாக வரலாற்று படமாக உருவாகி வரும் ‛அஜயன்டே இரண்டாம் மோசனம்' என்கிற படத்திலும் நடித்துள்ளார் கிர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள மனமே திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிகர் சர்வானந்த் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் சர்வானந்த், கிர்த்தி ஷெட்டி இருவரும் ஒரு குழந்தையின் பெற்றோராக நடித்துள்ளனர். குறிப்பாக சர்வானந்த் இந்த படத்தில் ஒரு குழந்தைத்தனம் கொண்ட அப்பாவாக நடித்துள்ளார். இதில் அம்மாவாக நடித்துள்ள கிர்த்தி ஷெட்டி குழந்தையை சமாளிப்பதை விட சர்வானந்த்தை சமாளிப்பதற்கு தான் மிகவும் சிரமப்படுகிறார் என்பதை டிரைலரில் உள்ள காட்சிகள் உணர்த்துகின்றன. முதன் முறையாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக கிர்த்தி ஷெட்டி நடித்திருப்பதால் இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.