நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும் ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், டமாக்கா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது படங்களில் தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்து இயக்குநர் ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இயக்குனர் ஒமர் லுலு மீது கொச்சி நெடும்பசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த ஒமர் லுலு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை பரிசளித்த நீதிமன்றம் ஒமர் லுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதுடன் வரும் ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.