சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சமுத்திரகனி தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தென்காசி பகுதியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் அவர் தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியதாவது: மலையாள படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். மலையாள படத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் நடிக்கிறேன். இதில் நான் மட்டுமே தெரிந்த முகம் மற்றவர்கள் புதியவர்கள். படத்தின் இயக்குனரின் தந்தை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறார்.
தொடர்ந்து படம் நடிப்பதால் இயக்குவதை கைவிடவில்லை. ஆண்டுக்கு ஒரு படம் கட்டாயம் இயக்குவேன். 'விநோதயசித்தம்' படத்திற்கு பிறகு தெலுங்கு படம் இயக்கினேன். அடுத்து தமிழ் படம் இயக்க இருக்கிறேன். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். அது குறித்தான பணிகள் நடைபெற்று வருகிறது.
திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது மாதிரி. இதுபோன்ற ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கடந்து செல்ல வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து வருவது உண்மைதான். குறிப்பாக கிராமப்புறங்களில் சினிமாவின் முதல் காட்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது. இது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.