விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்வம் மாயா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகியாக அதாவது அழகான பேயாக நடித்த ரியா ஷிபு யார் என்பது பலருக்கு தெரியாது. அவர் தயாரிப்பாளராக இருக்கும் ஷிபு தமினின் மகள். தந்தைக்கு தயாரிப்பில் உதவியாக இருந்த ரியா, அண்ணன் ஹாருன் நடித்த 'தக்ஸ்', ஹிந்தி படமான 'மும்பைக்கர்', வீரதீரசூரன் படங்களை தனியாக தயாரித்தார்.
மலையாளத்தில் 'கப்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரியா தற்போது 'சர்வம் மாயா' படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் தமிழில் அவரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தந்தை ஷிபு இறங்கி உள்ளார். மகளுக்காக கதை கேட்க தனியாக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். விரைவில் ரியா நடிக்கும் தமிழ் பட அறிவிப்பு வெளியாக இருக்கிறது.




