சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் விஜய்க்கும், அவருடைய அப்பா இயக்குனர், நடிகர் எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே மோதல் என கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் பேசி வருகிறார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது அப்பா, அம்மாவை நேரில் சென்று சந்தித்தார் விஜய். அதன்பிறகு இன்று விஜய்யை அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோர் சென்று சந்தித்துள்ளனர்.
விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அக்கட்சியின் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருடன் விஜய் இனி இணக்கமாகவே செல்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போதுதான் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும்.
இன்னொரு பக்கம் விஜய் மனைவியும், அவருடைய மகன், மகள் ஆகியோர் விஜய்யுடன் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார்கள் என்ற செய்தியும் உண்டு. விரைவில் அவர்களுடனான சமாதானமும் நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.




