ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து தம்பிக்கு இந்த ஊரு, மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் சத்யராஜ் நடித்திருந்தார். அதன் பிறகு சிவாஜி படத்தில் சத்யராஜை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஷங்கர் அணுகியபோது சத்யராஜ் மறுத்துவிட்டார். கடந்த காலத்தில் சில மேடைகளில் ரஜினியை சீண்டும் வகையில் சத்யராஜ் பேசியும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'கூலி' என்கிற படத்தில் ரஜினிக்கு நண்பர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் கடைசியாக 1986ல் வெளியான மிஸ்டர் பாரத் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்து நடிக்கிறார்கள்.