என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
மலையாள திரையுலகில் 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதை அடுத்து மீண்டும் மோகன்லாலை வைத்து, அவருடன் இணைந்து நடித்த ‛ப்ரோ டாடி' என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இயக்கினார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்' படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிரித்விராஜ் கூறும்போது ஒரு ஆச்சரியமான தகவலை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, “படப்பிடிப்பில் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது ஜாலியாக ஜோக் அடித்து சிரிப்போம். என்னை அவர் மோனே (மகனே) என்று தான் அழைத்து பேசுவார். ஆனால் ஷாட் ரெடி என கூறியதும் அவர் எழுந்து விட்டால் அதன் பிறகு என்னை சார் என்று மட்டும் தான் அழைப்பார். என் தந்தை மீது அவர் வைத்துள்ள நட்பின் உரிமையில் என்னை அவர் நடத்தும் விதமும் அதேசமயம் ஒரு இயக்குனராக அவர் எனக்கு அளிக்கும் மரியாதையும் என ஒரே நேரத்தில் இருவிதமாக என்னை ஆச்சரியப்படுத்துகிறார் லாலேட்டன் (மோகன்லால்)” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.