என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இங்கே தமிழ் சினிமாவில் வாரம் நான்கு படங்கள் ரிலீஸானாலும் பெரிய படங்களை தவிர மற்ற படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதேசமயம்  மலையாள சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே வெளியாகும் படங்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவைக்கும் விதமாகவே உருவாகி வருகின்றன. சின்ன பட்ஜெட்டில் உருவான பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் 100 கோடி, 200 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்துகின்றன.
அந்த வகையில் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் வெளியான ஆறாவது நாளிலேயே 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இதேபோன்று 50 கோடிக்கு மேல் வசூலித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருந்த இந்த படம் மேற்கூறிய எதிர்பார்ப்புகளால் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. வந்தவர்களை ஏமாற்றாமல் திருப்திப்படுத்தியும் அனுப்பியது. அந்த வகையில் அடுத்து 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் படம் இதுவாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.. 
 
           
             
           
             
           
             
           
            