68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு |
புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் டர்போ. இவர்களது கூட்டணியில் மூன்றாவது படமாக இது உருவாகியுள்ளதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சனா ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்தில் நடித்துள்ளார். வரும் மே 23ம் தேதி டர்போ படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்களை மம்முட்டி உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் மம்முட்டியிடம் சமீப காலமாக வெளியான வெற்றி படங்களான பிரம்மயுகம், மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகி என்கிற கதாபாத்திரமே இல்லையே. இனி கதாநாயகி இல்லாமலேயே படம் எடுக்கலாம் என்கிற முடிவுக்கு மலையாள இயக்குனர்கள் வந்து விட்டார்களோ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்முட்டி, “அது பற்றி நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த டர்போ படத்தின் கதையே இந்துலேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி அஞ்சனா ஜெயப்பிரகாஷை வைத்து தான் நகர்கிறது. என்னுடைய கதாபாத்திரமான டர்போ ஜோஸுக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை ஒரு வலையில் சிக்க வைக்க அவர் முயற்சிப்பது போன்று இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று உறுதியாக கூறியுள்ளார்.