லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கமல்ஹாசன், ஷங்கர் இருவரும் 1996ம் ஆண்டு இந்தியன் படத்தில் முதன்முறையாக இணைந்தார்கள். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் இந்தியன் 2 படம் திரைக்கு வருவதாக முன்பு அறிவித்திருந்தவர்கள். தற்போது ஜூலை மாதம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
அதோடு நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்கள். அதில் ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். ஜூலை மாதம் இந்தியன் 2 படம் திரைக்கு வரும் என்று தெரிவித்தார்கள். மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியன் 3 படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்கள்.