ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
திரைப்படம் மற்றும் சீரியல்களில் பிரபல நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் கேரளாவை சேர்ந்தவர். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்துள்ள அவர், தற்போது தமிழ் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்ர வேடங்களில் கலக்கி வருகிறார்.
இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் மலையாள நடிகர் மோகன்லால் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'மோகன் லால் நடித்த இரண்டாவது படமான ஹலோ மெட்ராஸ் கேர்ள் படத்தை தயாரித்து இயக்கியது என் கணவர் தான். என் கணவர் மோகன்லாலை வைத்து நான்கு படங்கள் தயாரித்துள்ளார். நான் நிறைமாத கர்ப்பமாக இருந்தபோது மோகன்லாலுக்கு பணம் கொடுக்க என் நகைகளை கொடுத்தேன். மோகன்லாலுக்கு நான், எங்கம்மா நிறைய சமைத்து கொடுத்திருக்கிறேன். வீட்டு வந்து மீன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு கேரியரில் எடுத்து செல்வார். இவ்வளவு செய்தும் என் கணவர் இறந்தபோது மோகன்லால் அவரை பார்க்ககூட வரவில்லை. ஏர்போர்ட்டில் என்னை பார்த்தால் கூட தலையை குனிந்து கொண்டு தலை தெறிக்க ஓடு விடுகிறார். இதனால் தான் உலகத்திற்கே பிடிக்கும் மோகன்லாலை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர் மேல் எனக்கு மரியாதையே கிடையாது' என்று கூறியுள்ளார்.