லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை ஒரு பிரபல பாலிவுட் பட நிறுவனம் தயாரிப்பதாகவும், அந்த படத்தில் மோடி வேடத்தில் தமிழ் நடிகர் சத்யராஜ் நடிப்பதாகவும் நேற்று ஊடகங்களில் செய்தி வைரலாகி வந்தது.
இந்த நிலையில் அது குறித்து சத்யராஜ் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். அதில், பிரதமர் மோடி வேடத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. எனக்கே இது புது செய்தியாக உள்ளது. அதேசமயம் பிரதமர் மோடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அது குறித்து யோசிப்பேன். ஏனென்றால் நடிகர் எம்.ஆர்.ராதா நாத்திக கருத்துக்களை கொண்டவராக இருந்தார். என்றபோதும் சில படங்களில் ஆன்மீகவாதியாகவும் நடித்திருக்கிறார் என்று ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார் சத்யராஜ்.
இதைவைத்து பார்க்கும் போது, மோடி வேடத்தில் நடிக்க தன்னை யாரேனும் அணுகினால் கண்டிப்பாக அதில் நடிப்பதற்கு சத்யராஜ் சம்மதம் தெரிவிப்பார் போலிருக்கிறது.