ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் அண்மையில் ஒரு விழாவில் பேசும்போது “இனி யாரும் கோயிலுக்கு போகாதீர்கள். தியேட்டருக்கு சென்று சினிமாவை வாழ வையுங்கள்” என்றார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' பட விழாவில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது : ஒரு விழாவில் நான் பேசும்போது கோயிலுக்கு போகாதீர்கள், சினிமாவுக்கு செல்லுங்கள் என்று நான் சொன்னது, பெரிய சர்ச்சையாகிவிட்டது. நான் கோயில் எனச் சொன்னது சர்ச்சையும் மசூதியையும் சேர்த்துதான். நான் பிறந்த குடும்பம் இந்து, வளர்ந்த குடும்பம் முஸ்லீம், கல்யாணம் செய்தது கிறிஸ்தவ குடும்பம். நான் ஏன் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் என்றால், தியேட்டர்கள் இன்றைக்கு வெறிச்சோடி கிடக்கின்றன. ஏனென்றால் எல்லோர் வாழ்க்கையும் ஒரு செல்லுக்குள், ஒரு விநாடிக்கு 30 சேனல்களை மாற்றக் கூடிய ரிமோட்டுக்குள் வந்துவிட்டது. சர்ச்சும், மசூதியும் ஆன்மிக விசாரணையை நடத்துபவை. சினிமா தியேட்டர், நீதி விசாரணை செய்கிறது. இன்றைக்கு இதுதான் தேவை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.
10 நிமிடப் பேச்சில் முழுவதையும் விளக்கி சொல்லிவிட முடியாது. அதை ஒற்றைக் கருத்தாக எடுத்துக் கொண்டு சாடாதீர்கள். கோயிலுக்கும் சர்ச்சுக்கும் மசூதிக்கும் செல்லுங்கள், தியேட்டருக்கு அடிக்கடி செல்லுங்கள்.
தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார் விக்ரமன். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும் இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படத்தை சூர்ய கதிர், கார்த்திகேயன் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.