என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பல இளம் நடிகர்கள் தற்போது சூப்பர் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் சத்யராஜூம் இணைந்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'வெப்பன்' படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார்.
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்குகிறார். வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ‛‛இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக 'வெப்பன்' தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன்.
சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக 'வெப்பன்' படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்ஷன் கதை இதில் இருக்கும். நாயகனாக சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக, அவர் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றார்.