படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி | பெண் வேடத்தில் அசார் | இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் : சுசித்ரா திடீர் முடிவு | 'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் |
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'புஷ்பா… புஷ்பா' பாடல் மே 1ம் தேதி யு டியுபில் வெளியானது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான அப்பாடலுக்கு தமிழில் மட்டுமே மிகவும் குறைவான பார்வைகள் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குப் பாடல் யு டியூபில் 21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே சமயம் தமிழ்ப் பாடலுக்கு ஒரே ஒரு மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. பெங்காலி மொழி பாடலுக்குக் கூட 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ள நிலையில் தமிழ் மொழிப் பாடலுக்கு அதில் பாதியளவுதான் பார்வைகள் கிடைத்துள்ளது.
ஹிந்தி மொழி பாடல் 24 மில்லியன் பார்வைகளையும், கன்னடம், மலையாளம் 1.8 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.
'புஷ்பா' முதல் பாக பாடல்கள் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.